பரமக்குடி வட்டத்தில் டிச.4ல் ஞாயிற்று கிழமை பரமக்குடி நகரில் அமைந்துள்ள ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மற்றும் ஹைராத்துல் ஜமாலியா கீழமுஸ்லீம் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு தேர்வு மையங்களிலும் காலை 10 மணிமுதல் 11 மணி வரை எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்போர் தேர்வு மையத்திற்கு காலை 09.30 மணிக்குள் வர வேண்டும். அனுமதி சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் கருப்பு பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், கைபேசி, புத்தகங்கள், கைப்பை மற்றும் எந்த ஒரு மிண்ணனு சாதனங்களயும் தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.
