திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, கைவினைப் பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மகிண்டி பங்குத்தந்தை  அருள்பணி ஜேம்ஸ் தலைமை தாங்கினார். திரு இருதய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருள் முனைவர் சகாயம், ராமநாதபுரம் மறைவட்ட அதிபர் அருள் முனைவர் சிங்கராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவரங்கம் பங்குத்தந்தை அருள்பணி முனைவர் ம.ரே.சேசு, கீழக்கரை பங்குத்தந்தை அருள்பணி சவரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவ,  மாணவியர் 150 க்கும் மேற்பட்டோர் தங்களது படைப்புகளைக்  காட்சிப்படுத்தினார். மேலும் இந்த விழாவிற்குச் சுற்று வட்டாரப்  பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ,  மாணவியர் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு சென்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.   பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஜோசப் பரிபாலன் நன்றி தெரிவித்தார்.



 
                                    