இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி இராமேஸ்வரம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்தில் 27.09.2023 முதல் 06.10.2023 முடிய கண்காட்சி நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
இராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் மூலம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுவதற்கான சிறுதானிய உணவுகளின் சிறப்புகள் குறித்த கண்காட்சியிணை பார்வையிட்டு கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட சிறுதானிய உணவு மற்றும் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,வேண்டுகோள்.
மகளிர்களின் தனித்திறமை வெளிப்பட்டது
கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பனை ஓலை பொருட்கள், கடல் சிப்பி அலங்கார பொருட்கள், மசாலா பொருட்கள், சணல் பைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், சிறு தானிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள், சேலைகள், நைட்டிகள், வயர் கூடைகள், உணவுப்பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள், மண்பானைப்பொருட்கள், பனங்கருப்பட்டிகள், அப்பளம், வடகம், சோப் ஆயில், பினாயில் மற்றும் பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.