Thursday, March 28, 2024
Homeஉடல்நலம்மனித உடலைப் பற்றி அறிவோம்

மனித உடலைப் பற்றி அறிவோம்

நுரையீரல் நேரம்

அதிகாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி, தியானம் செய்தால் ஆயுள் நீடிக்கும். இந்த நேரத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சிரமப்படுவார்கள்.

பெருங்குடல் நேரம்

அதிகாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

இந்த நேரத்துக்குள் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டால் மலச்சிக்கல் வரவே வராது. உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் நேரம்.

வயிறு நேரம்

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.

காலை உணவை சரியான நேரத்திற்குள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் சாப்பிட்டால் உணவு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

மண்ணீரல் நேரம்

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

நாம் சாப்பிடும் உணவை ஊட்டச் சத்தாகவும், ரத்தமாகவும் மாற்றுவது மண்ணீரல் ஆகும். மண்ணீரல் செயல்படும் நேரத்தில் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. ஏனென்றால் செரிமான சக்தி பாதிக்கப்படும்.

நீரழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்.

இதயம் நேரம்

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்த நேரத்தில் கோபப்பட்டு பேசுவது, பட படப்பது அதிகமாக இருக்கும்.

சிறு குடல் நேரம்

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.

மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கும் நேரம்.

சிறுநீர்ப்பை நேரம்

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.

நீர்க்கழிவுகளை வெளியேற்றும் நேரம்.

சிறுநீரக நேரம்

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.

அமைதி, தியானம், தெய்வங்களை வழிபட வேண்டிய நேரம்.

பெரிகார்டியன் நேரம்

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.

பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு சாப்பிட வேண்டிய நேரம் இது.

டிரிப்பிள் கீட்டர்

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பு அல்ல.

தலை முதல் அடி வயிறு வரை மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை.

இந்த நேரம் தூங்குவதற்கு உகந்த நேரமாகும்.

பித்தப்பை நேரம்

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.

இந்தக் காலகட்டத்தில் தூங்காமல் தொடர்ந்து விழித்திருந்தால் பித்தப்பையில் சிக்கல் வரும்.

கல்லீரல் நேரம்

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சுத்திகரிக்கும் நேரம். இந்த நேரத்தில் உறங்காமல் இருந்தால் மறுநாள் உடல் சோர்வு ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments