Sunday, May 28, 2023
Homeஅரசியல்ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியாக செயல்படும் "இ-சேவை மையங்கள்"

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியாக செயல்படும் “இ-சேவை மையங்கள்”

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம், திருவாடனை, ஆர்.எஸ் மங்கலம், கீழக்கரை, முதுகுளத்தூர், பரமக்குடி, கமுதி, கடலாடி, சாயல்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் போலியாக இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் தடுக்காமல் மெத்தனப் போக்கில் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாநில அரசு – ஏழை மக்கள்

மத்திய, மாநில அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களை தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த இ-சேவை மையங்களில் வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி.

இ-சேவை – சான்றிதழ்

கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகள் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள், மின்னாளுமை திட்டத்தில், இ – சேவை மையங்கள் வழியாக அரசு வழங்கி வருகிறது.

போலி இ-சேவை – ஸ்கேன், டைப் – ₹ 200

இது போன்று போலியாக செயல்படும் இ-சேவை மையங்களை ஏழை, எளிய மக்கள் அணுகி வருகின்றனர். இந்த இ-சேவை மையங்களில் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு மொத்தம் 200 ரூபாய்க்கு மேல் வாங்கி வருகின்றனர்.

எதற்கு அதிக கட்டணங்கள் வாங்குகிறீர்கள் என்று ஏழை, எளிய மக்கள் கேட்டால் ஸ்கேன் செய்வதற்கு, டைப் செய்வதற்கும் இவ்வளவு தொகை ஆகிறது என்று பொதுமக்களை திட்டவட்டமாக ஏமாற்றி வருகின்றனர்.

பலமுறை சான்றிதழ்

ஆனால் அப்படி அப்ளை செய்யப்படும் சான்றிதழ்கள் முறையாக அப்ளை செய்யப்படாததால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்காமல் ஏமாந்து வருகின்றனர். போலியாக செயல்படும் சேவை மையங்களில் பலமுறை சான்றிதழுக்கு அப்ளை செய்தாலும் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

முறையான பயிற்சி

போலியாக செயல்படும் இ-சேவை மையங்களில் முறையான பயிற்சி பெறாமல் இ-சேவை மையங்கள் நடத்துவதால் எந்த சான்றிதழுக்கு என்ன சான்றிதழ் இணைக்க வேண்டும் என்ற முழுமையான விவரங்கள் தெரிவதில்லை. இதனால் ஏனோ தானோ என்று பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.

நடவடிக்கை

எனவே மாவட்டம் முழுவதும் போலியாக செயல்படும் இ-சேவை மையங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படியுங்கள் || பரமக்குடி நகராட்சி சுகாதாரத் துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments