ராமநாதபுரம் உர விற்பனையகத்தில் விவசாயிகள் மையம் தொடக்கம்
ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ளவி.எஸ்.மணி உரம் விற்பனை நிலையத்தில் கிரீன்ஸ்டார் உர நிறுவனத்தின் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகள் செழிப்பு மையம் (பிஎம்கேஎஸ்கே) தொடக்கவிழா நடைபெற்றது.
ஸ்பிக் மற்றும் கிரின்ஸ்டார் உர நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.நாராயணன், சென்னையிலி ருந்தபடி காணொலி மூலம் விழாவை தொடங்கிவைத்தார். ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர், வேளாண் உதவி இயக்குநர், தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு வேளாண் அலுவலர்கள், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனத்தின் மண்டல மேலாளர், விற்பனை அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.விவசாயிகள், உர விற்பனை யாளர்கள் கலந்துகொண்டனர்.