சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தில், மறவமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் உரங்கள் கிடைக்கவில்லை எனவும், தங்களை அலைக்கழிப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
இதையடுத்து ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உத்தரவின் பேரில் மறவமங்கலம் கூட்டுறவு சங்கத்துக்கு தேவையான உரங்கள் கொண்டு செல்லப்பட்டன.தொடர்ந்து வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், காளையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்நாதன், டான்பெட் உதவியாளர் சின்னையா, கூட்டுறவுச் சங்க செயலாளர் செந்தில் ஆகியோர்200 விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினர்.
900 டன் உரம் உள்ளன
ஒரே நாளில் 25 டன் யூரியா, 15 டன் டிஏபி, 15 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட அளவில் யூரியா 2,500 டன், டிஏபி 1,100 டன், காம்ப்ளக்ஸ் 2,300 டன், பொட்டாஷ் 550 டன் இருப்பு உள்ளதாகவும், கூட்டுறவு சங்கங்களில் மட்டும் 900 டன் உரம் இருப்பு உள்ளதாகவும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.