புதுடெல்லி, புதுடெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுலை சந்தித்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை மீண்டும் முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி நாடு தழுவிய டிராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையான எம்.எஸ்.பி., நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி-ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்தனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 12 விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் எம்.சி.வேணுகோபால், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், சுக்ஜிந்தர் சிங் ரந்தவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக தன்னை சந்திக்க வந்த விவசாயிகளை பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்க மறுப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார். விவசாயிகள் என்பதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றார் ராகுல்.
அப்போது, விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு ஏற்கனவே கூறியதை நினைவூட்டிய விவசாயிகள், மத்திய அரசை வலியுறுத்த வலியுறுத்தினர். இந்தச் சட்டத்தை இயற்ற தனி நபர் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ராகுலிடம் வலியுறுத்தினர். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்தும் ராகுலுடன் விவாதித்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஜக்ஜித் சிங் தலேவால், “விவசாயிகளுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டியது அவசியம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, மீண்டும் டெல்லியை முற்றுகையிட தயாராக உள்ளோம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு தழுவிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.