இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, பரமக்குடியில் வைகை பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகை நகர் பகுதியில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வைகைப்பாச விவசாயிகள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கோட்டைச்சாமி, காயாம்பு, சிவகுமார், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் தென்மண்டல தலைவர் மதுரைவீரன், ஜான் சேவியர் பிரிட்டோ ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினர். இதில் மேகதாதுவில் கர்நாடக அரசு அத்துமீறி அணைகட்ட முயற்சிப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் நிர்மட்ட உயரத்தை 152 அடி யாக உயர்த்த வேண்டும். வைகை அணையில் சுமார் 22 அடிக்கு மேவிய மணல், நெகிழிக்கழிவுகளை அகற்ற வேண்டும். வலது பிரதாண கால்வாயில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர் வார வேண்டும்.
முதுகுளத்தூர்,கமுதி, கடலாடி வட்டங்கள் பயன்பெறும் வகையில் ரெகுநாத காவிரி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.