கமுதியில் பட்டறிவுப்பயணமாக சென்ற விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 50 விவசாயிகள் பட்டறிவுப்பயணமாக சென்றனர்.
வேளாண்மை குறித்து விழிப்புணர்வு
கமுதி வட்டாரத்தைச்சேர்ந்த நத்தம், புனவாசல், சடையனேந்தல் கிராமங்களைச் சேர்ந்த 50 விவசாயிகள் பயணமாக சென்றனர்.வேளாண்மை குறித்து அறிந்துகொள்வதற்காக எட்டிவயலில் உள்ள தரணி என்ற அறக்கட்டளை பண்ணைக்கு பட்டறிவுப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
விவசாயிகள் ஆலேசானை
அங்குவிவசாயிகளுக்கு இயற்கையான முறையில் பாரம்பரிய நெல் ரகங்களைப்பயிரிடுதல், தொழுஉரம் இடுதல்,ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுதல், பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிட்டு மடக்கி உழுவதால் ஏற்படும் நன்மைகள், உயிர் உரங்களைப் மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயன்படுத்தி மண்ணின் வளத்தைவேளாண்மை உதவி இயக்குநர் ச. சிவராணி ஆலோசனையின் பேரில் வேளாண்மைதொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ஈஸ்வரி விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்துச்சென்றார்.