இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் தமிழகத்தில் அரசு சார்பாக மாவட்டங்கள் வாரியாக புத்தகத் திருவிழா நடைபெறும் நிலையில், பரமக்குடியில் உள்ள மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இணைந்து இன்று முதல் முதல் 15ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற உள்ளது.
புத்தகத்திருவிழா
இந்த புத்தகத் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் புத்தக கண்காட்சியில் தினந்தோறும் மாணவ மாணவியர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் பிரபலங்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியினை துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மாரத்தான் போட்டி
பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த போட்டியினை புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழு தலைவர் சேகர் செயலாளர் வழக்கறிஞர் பசுமலை,ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியாக பெருமாள் ராஜா உள்ளிட்ட புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.