Friday, April 12, 2024
Homeஆன்மிகம் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை

 புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை

  • பெருமாளின் ஆசி உங்களுக்கு நிறைவாக கிடைக்கட்டும்.
  • புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்கு சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.
  • அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். எளிமையான முறையில் புரட்டாசி வழிப்பாட்டை இப்படி செய்து பாருங்கள்.பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

புரட்டாசி வழிபாடு :

  • புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். சனிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, குளித்து, பூஜை சாமான்களை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

கலச சொம்பு :

  • பிறகு கலச சொம்பை எடுத்து, அதற்கு நாமமிட்டு துளசி மாலை சுற்ற வேண்டும். இந்த சொம்பில் வீடு வீடாக சென்று தளுகைக்கு அரிசி கேட்க வேண்டும். இப்படி செய்வதால் நம்முடைய அகந்தை அழியும்.
  • அப்படி கொண்டு வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியங்கள் படைக்க இந்த அரிசியை தான் பயன்படுத்த வேண்டும்.

பெருமாளுக்கு படையல் :

  • வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் இடம் பெறுவது நல்லது.
  • சில குடும்பங்களில் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம் என்று படையல் இடுவதும் வழக்கம்.
  • நைவேத்தியம் படைத்து பெருமாளுக்கு 9 அல்லது 11 எண்ணிக்கையில் வடை மாலை சாற்ற வேண்டும்.
  • அதன்பின் சொம்பில் நாமம் போட்டு பச்சரிசி மற்றும் சில்லறை நாணயங்களை நிரப்பி கொள்ள வேண்டும்.

துளசி தீர்த்தம் :

  • துளசி தீர்த்தம் வைக்கும் பஞ்ச பாத்திரத்தில் சிறிது பச்சை கற்பூரம் மற்றும் துளசியை சேர்க்க வேண்டும். மேலும் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காயும் இடம் பெறுவது அவசியம்.

மாவிளக்கு ஏற்றல் :

  • புரட்டாசி பூஜையில் மாவிளக்கு ஏற்றுவது விசேஷம். தேங்காய் உடைத்து, மாவிளக்கேற்றி, தூப தீபங்கள் காண்பித்து, சாம்பிராணி, கற்பூர ஆரத்தியை படையல் முழுவதுமாக சுற்றி எடுக்க வேண்டும்.
  • குறிப்பாக கோவிந்தா.. கோவிந்தா.. என்று நாமம் எழுப்பி பெருமாளை வழிபட வேண்டும்.

குறிப்பு

  • இந்த விரதத்தை முடிக்கும் வரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது நல்லது.
  • சனிக்கிழமைகளில் மதியம் 1.30 மணியில் இருந்து 3 மணி வரை எமகண்டம். இதனால் 1.30 மணிக்குள்ளாக பூஜையை முடித்து கொள்ள வேண்டும்.
  • காக்கைக்கு உணவு வைத்த பின் நீங்கள் விரதத்தை முடிக்கலாம். மேலும் அன்னதானம் செய்வது மிக மிக சிறப்பான பலன்களை கொடுக்கும்.

சனிக்கிழமையன்று இந்த முறையில் விரதத்தை கடைபிடித்தால்… பெருமாளின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments