மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் குறைதீர்க்கும் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு தீர்வுத்துறை அலுவலர்கள் மூலமாக தெரிவித்தர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில்,
மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன.மேலும் மீனவர்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு அதன் மூலம் மாவட்ட அளவில் தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டு வருகின்றன.தலைமை அலுவலகம் மூலம் தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி பொதுவான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மீனவர்கள் முன் வைத்த கோரிக்கைகளான மீனவர் குடியிருப்பு பகுதிகளை சீரமைத்து தர வேண்டுதல் மற்றும் பிற மாவட்ட மீனவர்கள் படகில் மீன்பிடிக்கும் பகுதிக்கு வராமல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மீனவர்கள் மழைக்காலத்தில் தங்கி மீன் பிடிப்பதற்கு ஏதுவாக நிழற்குடை வசதி அமைத்து தரவும் கடற்கரை பகுதிகளில் சாலை வசதி அமைத்து தரவும், கேட்டுக் கொண்டதற்கிணங்க அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) .நாராயண சர்மா, அவர்கள், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.