Tuesday, June 6, 2023
Homeராமநாதபுரம்தனுஷ்கோடி அருகே விபத்துக்குள்ளான மீனவர்களின் படகு

தனுஷ்கோடி அருகே விபத்துக்குள்ளான மீனவர்களின் படகு

ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு ஒன்று தனுஷ்கோடி அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது. அதிலிருந்த 4 மீனவர்கள் சக மீனவர்களால் மீட்கப்பட்டனர்.

விபத்திற்குள்ளான மீனவர்களின் படகு

ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. தனுஷ்கோடி அருகே நெப்போலியன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் லவ்சன், அலெக்சாண்டர், பாலு, ஆபிரகாம் லிங்கன் ஆகிய 4 மீனவர்கள் நேற்று பிற்பகல் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் திடீரென ஓட்டை விழுந்து நீரில் மூழ்கியது .

படகிலிருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்து, ஐஸ் பெட்டி மற்றும் டீசல் கேன்களை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த லயோலா என்பவருக்குச் சொந்தமான படகில் வந்தவர்கள் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்டு ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments