Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்ராமநாதபுரத்தில் கொடிநாள் நிதி வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் கொடிநாள் நிதி வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் கொடிநாள் நிதி வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் கொடிநாள் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் கொடிநாளுக்கான நிதியினை வழங்கினார்.

தியாகத்தை போற்றும்

பின்னர் பேசியதாவது , இந்திய நாட்டின் பாதுகாப்பு அரனாக பாதுகாத்து வரும் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக முன்னாள் படை வீரர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதியே முன்னாள் படை வீரர்களின் கொடிநாள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பெறக்கூடிய நிதியினை முன்னாள் படை வீரர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கூடுதல் வசூல்

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இலக்கீட்டை விட கூடுதலாக வசூல் செய்து முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.70,24,000 இலக்கீடு ஒதுக்கீடு பெறப்பட்டு ரூ.70,65,000 வசூல் செய்து அதற்கான நிதி பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

G-PAY வசதி

தற்பொழுது 2022ஆம் ஆண்டிற்கு இலக்கீடாக ரூ.74,63,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கீட்டை விட அதிகளவு வசூல் பெற்றிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் தாராளமாக நிதியினை வழங்கிட வேண்டும். மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் கொடிநாள் நிதி பெற வருபவர்களிடம் G-PAY வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாராளமாக நிதியினை வழங்கி படைவீரர்களின் ஒப்பற்ற பணிக்கு பாதுகாப்பாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் மதியழகன், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, முன்னாள் படைவீரர் நலத்துறை கண்காணிப்பு அலுவலர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments