இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை திமுக ஆட்சியில் தொடரப் பட்டு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவர்களுக்கு வழங்கினார்.
ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டி வழங்குதல்
மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை அப்படியே பின்பற்றி தமிழகம் முழுவதும் திமுக அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கி வருகின்றனர்.
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவர்களுக்கு வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.247 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022- 2023 ஆம் கல்வியாண்டில் 105 பள்ளிகளில் படிக்கும் 9936 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ஒதுக்கீடு பெற்று இதுவரை 5091 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 120 மாணவிகளுக்கும்-127 மாணவர்களுக்கும் என 247 மாணவ மாணவிகளுக்கு ரூ.720325 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.மற்ற மாணவ மாணவிகளுக்கும் இந்த மாதம் இறுதிக்குள் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் – முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்-தாசில்தார் சடையாண்டி – பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி தாளாளர் சாகுல் அமீது பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அலாவுதீன் ; மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.