இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளியில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முதுகுளத்தூர் சர்வோதயா அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சிறப்பாக நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்
இம்முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சிகிச்சை அளித்தனர். இதில் பல்வேறு கிராம பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். 28 பேருக்கு கண்புரை இலவச சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதே போல் கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு 20 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும் சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ குழு பணியாளர்கள் மற்றும் சர்வோதயா அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.