பரமக்குடியில் “இலவச கேஸ் இணைப்பு” சிறப்பு முகாம்
பிரதமரின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு பதிவு செய்யும் சிறப்பு முகாம் 19/04/2022 முதல் 21/04/2022 வரை காலை 10 மணி முதல் மாலை 04 மணி வரை மஞ்சள்பட்டிணம் பேருந்து நிறுத்தம் அருகில் வளையனேந்தல் ரோடு கார்னர் அமைந்துள்ள நாதன் கேஸ் ஏஜென்சியில் நடைபெற உள்ளது.
இதுவரையிலும் கேஸ் இணைப்பு பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்:
பதிவு தேவையான ஆவணங்கள்:
1. சுமார்ட் கார்டு நகல்.
2. சுமார்ட் கார்டில் உள்ள அனைத்து நபர்களின் ஆதார் கார்டின் நகல்.
3. பதிவு செய்யும் நபரின் வங்கி கணக்கு எண், மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்.
4. இரண்டு பாஸ் போர்ட் சைஸ் போட்டோ.
5. சாதி சான்றிதழ் நகல்.
6. தற்போது உபயோகத்தில் உள்ள செல் நம்பர்.
மேலும் தொடர்புக்கு: 9787651999.