Tuesday, December 5, 2023
Homeஅரசியல்இலவச லேப்-டாப்கள் 2 ஆண்டுகளாக வழங்கப்படாதது ஏன்? || Why haven't students been given...

இலவச லேப்-டாப்கள் 2 ஆண்டுகளாக வழங்கப்படாதது ஏன்? || Why haven’t students been given free laptops for 2 years?

கொரொனோ காலகட்டத்தில் கணினி மற்றும் லேப்டாப்புகள விற்பனை சர்வதேச அளவில் உயர்ந்ததால் கணினி தயரிப்பு நிறுவனங்கள் தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டத்தின் கீழ் லேப்டாப்கள் தயாரித்துக் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை.

தமிழக அரசின் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோர நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததன் காரணமாகவே கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட முடியவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டு மற்றும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

மாணவர்களுக்கான இலவச லேப்டாப்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தை எடுக்க முன்வராததே காரணம் ஆகும். இதற்கு பின்னணியாக கொரொனொவை பள்ளிக்கல்வித்துறை சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதையும் கொரொனோ தொற்று ஆட்டிப்படைத் துவருகிறது. வீட்டிலிருந்தே பணி செய்ய வேண்டிய சூழல் மற்றும் ஆன்லைன் வழியில் கல்வி கற்க வேண்டிய நிலை என முன்னெப்போதும் இல்லாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணிப்பொறி, லேப்டாப்புகள் ஆகியவற்றின் தேவை உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அவற்றின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே கணிப்பொறி , லேப்டாப்புகள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களின் லாபமும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு வழங்கக் கூடிய இலவச லேப்டாப்களை தயாரிக்க அரசு அழைப்பு விடுத்த போதிலும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு வழங்கக்கூடிய லேப்டாப்புகள் மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படுபவை. அதே வேளையில் சந்தைகளுக்கு அனுப்பப்படும் லேப்டாப்புகளில் விலை 30 ஆயிரத்திற்கும் அதிகமாகும். தற்போதைய கொரொனோ காலகட்டத்தை பயன்படுத்தி அதிக விலை கொண்ட லேப்டாப்களை தயாரிக்கவே நிறுவனங்கள் விரும்புவதே டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டாததற்கு காரணமாகும்.

இதன் காரணமாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய லேப்டாப்களை உரிய நேரத்தில் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

 

Also read || ராமானுஜாச்சாரியாரின் நினைவாக ‘சமத்துவ சிலை’யை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments