பரமக்குடியில் காந்தி ஜெயந்தி விழா சிறப்புக் கருத்தரங்கம்.
பரமக்குடியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் காந்தியம் பேசுவோம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. எமனேஸ்வரம் கலை இலக்கிய மன்றப் பொறுப்பாளர் டி.எம்.சிவகுமார் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
பரமக்குடி நகரின் மூத்த மருத்துவர் ராம்தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும் எழுத்தாளருமான என்.எஸ்.பெருமாள் கருத்தரங்கினை நெறிப்படுத்தி தொடங்கி வைத்தார். காந்தியைப் பற்றிய பல தகவல்கள், குறிப்பாக இன்றைய நிலையில் காந்தியம் எவ்வாறாக தேவைப்படுகிறது என்கிற பார்வையுடன் அனைவரும் பேசினர்.
எமனேஸ்வரம் சௌராஷ்டிரா சபையின் துணைத் தலைவர் அரிமா எம்.எஸ்.கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத் தலைவர் எஸ்.பி ராதா, வழக்கறிஞர் சி.பசுமலை, வி.சி.க சார்பில் வேந்தை சிவா, பஞ்சாலைசங்கத்தின் சார்பில் சிவகுமார், போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் பொறுப்பாளர் சி.செல்வராஜ், ஆசிரியர் கே.ஆர்.ரவீந்திரன், இந்தியன் ரத்ததான வங்கியின் சார்பில் சபரிபாலா, எழுத்தாளர் உரப்புளி நா.ஜெயராமன், பி.எஸ்.என்.எல் பணி நிறைவு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் ஆர்.ராமசாமி, வி.சேது ராஜன் உள்ளிட்ட பல தோழர்கள் காந்தியம் பற்றிய தங்களுடைய கருத்தினை பதிவு செய்தனர்.
எமனேஸ்வரம் கலை இலக்கிய மன்ற செயலாளர் பி.ஆர்.லெட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.