பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதன்பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருாளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் 2025- 2023-ம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 9.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என மத்திய அரசு தனது பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புகள் விவசாய துறையைப் பெரிய அளவில் பாதிக்காத நிலையில், 2021-22-ம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது.
கொரோனா தொற்றில் இருந்து இந்திய வர்த்தக சந்தை மீண்டும் வரும் நிலையில், ஒமைக்ரான் நாட்டின் வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுத்தாத நிலையில், 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி 11.8 சதவீதமாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் இந்தியாவின் சேவைத்துறை 2021-22-ம் நிதியாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும், மேக்ரோ எகோ இண்டிகேட்டர்ஸ் 2022-23-ம் நிதியாண்டில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.