மீனவர்களால் கண்டுபிடிக்கபட்ட ராட்சத உழுவை மீன்
ராமநாதபுரம் மாவட்டம்,அழகன்குளம் என்ற கடல் பகுதியில் கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத உழுவை மீனை மீனவர்கள் மீட்டுனர் .
நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கரையோரம் மீனவர்கள் ராட்சத உழுவை மீன் ஒன்று மயங்கிய நிலையில் கரை ஒதுங்குவதைக் கண்டனர். பின் மீனவர்கள் கயிறு கட்டி அந்த மீனை ஆழமான கடல் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
அந்த ராட்சத மீனானது ஆழ்கடல் பகுதியை நோக்கி நீந்தி சென்றது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீனை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
மீனவர்களுக்கு பாராட்டு
சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீன் கடலுக்குள் சென்றது.கரை ஒதுங்கிய மீனை குறிப்பிட்ட நேரத்தில் மீட்டு, கடலுக்குள் அனுப்பிவைத்த மீனவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.இது போன்ற மீன்கள் ஆழ்கடல் பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும்.
சில நாட்களாக தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்ட நிலையில், கடலின் கரையோரம் பகுதிக்கு வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.