கடந்த 1989ல் திரைக்கு வந்த ‘இதயத்தை திருடாதே’ கிரிஜா என்றால் தெரியாத ரசிகர்கள் இருக்க முடியாது.
தெலுங்கில் மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜூனா ஜோடியாக ‘கீதாஞ்சலி’ என்ற படத்தில் அறிமுகமானவர், கிரிஜா ஷெட்டர்.
தற்போது அவருக்கு 54 வயது ஆகிறது. பிரிட்டிஷ் நடிகையான அவர், ‘கீதாஞ்சலி’ படத்தின் தமிழ்ப் பதிப்பான ‘இதயத்தை திருடாதே’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கிய ‘வந்த னம்’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார்.
1992ல் இந்தியில் ‘ஜோ ஜீத்தா வோஹி சிக்கந்தர்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஏ.ரகுராமி ரெட்டி இயக்கத்தில் ‘ஹ்ருதயாஞ்ச என்ற தெலுங்கு படத்தில் கிரிஜா ஷெட்டர் நடித்தார்.
1992ல் உருவான இப்படம் 2002ல் வெளியிடப்பட்டது. பிறகு 2003ல் இந்தியில் உருவான ‘துஜே மேரி கஸம்’ என்ற படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.
இந்நிலையில், 20 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் சினிமாவில் நடித்துள்ளார்.
கன்னடத்தில் ரக்க்ஷித் ஷெட்டியின் பரம்வா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘இப்பானி தப்பிட இலியாலி’ என்ற கன்னடப் படத்தில், ஹீரோயின் அம்மா வேடத்தில் நடித்துள்ளார்.
இது ரொம்ப பவர் புல் கேரக்டர் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்ட கிரிஜா ஷெட்டர், இப்படத்தின் ரிலீசுக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார்.