இராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் நேற்று காலையில் பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேரோட்டத்தில் நான்கு ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தங்க கருட வாகனம்
உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடித் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருக்கோவிலில் ஆடித் திருவிழா கடந்த 13-7 -2023-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்த 17 நாட்கள் நடைபெற்று வரும். இந்த திருவிழாவில் முக்கிய திருவிழா நிகழ்ச்சியான கடந்த 17ஆம் தேதி திங்கட்கிழமை ஆடி அமாவாசை நாளன்று தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தேரோட்டம்
அடுத்ததாக திருவிழாவின் 7 ஆம் நாள் நிகழ்ச்சியான கடந்த புதன்கிழமை இரவு பர்வதவர்த்தின் அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா தொடங்கி கடந்த 8 நாள்களும பர்வதவர்த்தினி அம்மன் தினசரி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று பர்வதவரத்தினி அம்மன் திருத்தேரோட்டம் காலையில் நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை
தேரோட்டத்தை அடுத்து நேற்று அதிகாலையில் ராமநாதசாமி திருக்கோவிலில் பர்வதவரத்தினி அம்மன் ராமநாதசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் அங்கிருந்து பர்வதவரதினி அம்மன் எழுந்தருள திருக்கோவிலின் கிழக்கு நுழைவு வாயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த திருத்தேருக்கு வருகை தந்து, அங்கு சிறப்பு வழிபாடுகள், தீபார தணை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அம்மனை திருத்தேரை வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்து தரினம் வழங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன், திருக்கோவில் உதவி பொறியாள ராமமூர்த்தி, யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், பா.ஜ.க ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.