தென்னிந்தியா பல்கலைக்கழக மேசைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்கு அரசு கல்லூரி மாணவிகள் தகுதி
பரமக்குடி அரசு கல்லூரி மாணவிகள் தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
பரமக்குடி மாணவிகள் முதல் இடம்
அழகப்பா பல்கலைக்கழகத்தின் 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மேசைப்பந்து போட்டி இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது. இப் போட்டியில் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கலந்துு கொண்டனர். அதில் பெண்கள் அணி முதல் இடத்தையும், ஆண்கள் அணி மூன்றாம் இடத்தையும் பெற்று போட்டியில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் அணியில் முதுகலை இரண்டாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவிகள் சிவரஞ்சனி, மற்றும் ஹேமா,பிரியா, ஆகிய மூவரும் அழகப்பா பல்கலைக்கழக அணிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் 14 முதல் 16 வரை நடைபெறுகின்றது.
மாணவர்களுக்கு பாராட்டு
தென்னிந்தியா பல்கலைக்கழக இடையிலான மேசைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் குணசேகரன், உடற்கல்வி இயக்குனர் பிரசாத், மின்னணுவியல் துணைத் தலைவர் சிவக்குமார், உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், என பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.