சிவகங்கை அரசு கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணிபுரிந்தனர். வகுப்பு முடிந்ததும் கல்லூரி முன் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடுக்கான அரசாணையை செயல்படுத்தாததால், தகுதியுள்ள உதவிப் பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்களாகவும், இணைப் பேராசிரியர்கள் பேராசிரியர் களாகவும் பணி மேம்பாடு பெற முடியவில்லை. எம்.பில்., முனைவர் பட்டத்துக்கான ஊதியம் வழங்கவில்லை.
கல்லூரி இடமாறுதல் நடத்தவில்லை ஆண்டுகளாக கலந்தாய்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.
இதில் கிளை செயலாளர் ராமமூர்த்தி, இணைச் செயலாளர் சதீஷ்கண்ணா, மண்டல துணைத் தலைவர் சிவா, இணைச் செயலாளர் மகேஸ்குமார், முன்னாள் பொருளாளர் கேத்தராஜ் உள்ளிட்டோர் பேசினர். கிளை பொருளாளர் லாரன்ஸ் சேவியர் நன்றி கூறினார்.