இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் வசதிக்கேற்ப சிறந்த மருத்துவமனையாக விளங்குவதற்கான வழிமுறைகளை ஏற்பாடு செய்யப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ சேவையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,தலைமை வகித்தார். உடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் இராமகருமாணிக்கம் , துணை இயக்குநர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம், சென்னை செந்தில்குமார், முதல்வர் இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.