Thursday, September 21, 2023
Homeராமநாதபுரம்ராமநாதபுரத்தில் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரத்தில் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளை சமூக நலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் – 2014-ன் கீழ்

  • அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
  • ஆகவே, உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி 31.12.2022 குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி
  • எண்: 04567-230466-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments