இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-2024-ம் ஆண்டுக்கான நேரடிச் சேர்க்கை 23.09.2023 வரை நீட்டிக்கப்பட்டு கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
1)ஓராண்டு தொழிற்பிரிவுகள்: கணினி இயக்குபவர் (COPA)இ சூரிய மின்சக்திவியலாளர் தையல் தொழில்நுட்பம் மற்றும் Industry 4.0-ன் புதிய தொழிற்பிரிவுகளான இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனு பேக்ச்சரிங் டெக்னீசியன் மேனுபேக்ச்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேசன்
2)ஈராண்டு தொழிற்பிரிவுகள்: பொருத்துநர். கடைசலர். பின்னலாடை தொழில்நுட்பவியலாளர் இயந்திர படவரைவாளர், கம்மியர் மின்னணுவியல், இயந்திர வேலையாளர் 4.0- ன் புதிய தொழிற்பிரிவான அட்வான்ஸ்டு CNC மெக்ஷிசினிங் டெக்னீசியன், கம்மியர் மின்சார வாகனம்
மேற்காணும் அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் 8-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், மேலும் பெண்களுக்குரிய தொழிற்பிரிவிற்கு வயது வரம்பு ஏதுமில்லை. பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கைபேசி(கட்டாயம்) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் பரமக்குடி, இராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடிக்கு அலுவலக நேரத்தில் நேரில் சென்று சேர்க்கை செய்து கொள்ளலாம்.
விண்ணபிக்க கடைசி தேதி: 23.09.2023
மேலும் இந்நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு அரசினால் கீழ்க்கண்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.
1.மாதாந்திர கல்வி உதவி தொகை ரூ.750/- வழங்கப்படும்.
2.விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும்.
3.பயிற்சியாளர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு தொலைபேசி எண்: பரமக்குடி -04564-231303, இராமநாதபுரம்-04567-231214, முதுகுளத்தூர் -04576- 222114-ல் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.