ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவரின் 115- ஆவது ஜெயந்தி விழா, 60-ஆவது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள கலையரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேவரின் படத்தை திறந்து வைத்து, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் 228 பயனாளிகளுக்கு ரூ. 23.66, லட்சம் 728 பயனாளிகளுக்கு ரூ.23.5 உதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சர்கள், அதிகாரிகள்
இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே. பிரவீன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.