மதுக்கூடமாகும் அரசு பள்ளி வளாகம்
சிவகங்கை, ஆக. 22-
சிவகங்கை அருகே கீழக்கண்டனி அரசு பள்ளி வளாகத்தை இரவில் மதுக்கூடாக பயன்படுத்துவோர் குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். கீழக்கண்டனியில் தொடக்க, உயர்நிலை பள்ளி ஒரே வளாகத்தில் உள்ளன. இப்பள்ளியில் 180 மாணவர்கள் படிக்கின்றனர். கீழ, மேல கண்டனி,மேலவெள்ளஞ்சி, உசிலங்குளம், சாமியார் பட்டி, வேம்பங்குடி, துவங்கால், இத்திராதகர் உள்ளிட்ட கிராமங்களில்இருந்து வருகின்றர் பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றதும் இரவில் இப்பள்ளி வளாகத்தில் சமூகவிரோதிகள் அமர்ந்து மது அருந்துகின்றன
மேலும் பாட்டில் களை பள்ளி வளாகத்தில் உடைத்து விடுகின்றனர் பகலில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அதை மிதித்து காயத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து சிவகங்கை நகர் போலீசில் பல முறை புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை தெரிவிக்கின்றனர்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் எம்.முத்துக்கிருஷ்ன் கூறியதாவது,பள்ளி வளாகத்தில் மாலை மற்றும் இரவில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்தி, பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனர். பள்ளி வளாகத்தில் அடிக்கடி மது அருந்து வோர் பெயர் விபரங்களை சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இரவில் கீழக்கண்டனி பகுதியில் போலீசார் ரோந்து வருவதே இல்லை