பரமக்குடி டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் 121 வது காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள் விழா மற்றும் பள்ளி மாணவ தலைவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எமனேஸ்வரம் சார்பு ஆய்வாளர் செல்வராஜ் மாணவ ஆட்சி மன்றத்தை ஆர்வமுடன் கேட்டு அறிந்து விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்கள் வரும் கல்வியாண்டில் கடமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கல்வியின் சிறப்பு பற்றியும் பேசினார். சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேர்மன் வாசன் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அன்றாட வாழ்வில் அறிவியல் என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே சில கலந்துரையாடல்களை கேட்டும் அவர்களை ஆர்வமூட்டினார். பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி (எ) பாபு மாணவர்களின் ஒழுக்கம், கல்வி வளர்ச்சியும் ஊக்கப்படுத்தி தலைமை தாங்கி சிறப்பு செய்தார்.
பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ், ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெற்றன. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தார். பள்ளியின் அனைத்து ஆசிரியை ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.