Sunday, May 28, 2023
Homeராமநாதபுரம்இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து வருகிற 22.12.2022 காலை 10.00 மணியளவில் உதவி ஆட்சியர் தலைமையில் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 30.12.2022 காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் “மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதால்

  • இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
  • தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID அட்டை) விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளலாம்.
  • ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, அனைத்து விதமான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments