இராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் தொலை தூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் குறைகளையும் நிவர்த்தி செய்திட வட்டார அளவில் வேளாண்மைத்துறை அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படும். மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் தாங்கள் சார்ந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாய்ப்பினை விவசாயிகள் அனைவரும் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.