ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115- வது ஜெயந்தி விழா மற்றும் 60- வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் அரசு சார்பில் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
நேர்த்திக்கடன்
நேற்று காலையிலிருந்தே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தினர். ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும், சிலம்பாட்டம் ஆடி வந்தும் மரியாதை செலுத்தினர்.
போலீஸ் பாதுகாப்புடன்
தேவர் குருபூஜையை முன்னிட்டு தென் மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் 4 டி.ஐ.ஜிக்கள், தலைமையில் 34 காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேவர் குருபூஜை விழா அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.