Friday, December 2, 2022
Homeஉடல்நலம்மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்

  •  காலை உணவு                     

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை சுரக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்கு காரணமாகும்.

  • அதிகமாக சாப்பிடுவது   

அதிகமாக சாப்பிடுவதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தியை குறைத்து விடுகிறது.

  • புகை பிடித்தல்                     

தெடர்ந்து புகை பிடிப்பதால் மூளை சுருங்கி பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது

  • சர்க்கரை சாப்பிடுதல்

தினந்தோறும் சர்க்கரை சாப்பிடுவதால் புரோட்டின் நமது உடலில் சேர்வதை தடுக்கிறது. இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கிறது.

  • மாசு நிறைந்த காற்று 

 தினந்தோறும் மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் குறைகிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் குறைவாக செல்வதால் மூளை பாதிப்பு அடைகிறது.

  • தூக்கமின்மை           

தினந்தோறும் நன்றாக தூங்கி வந்தால் மூளைக்கு ஓய்வு கிடைக்கும். இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பது மூளையை பாதிக்கும்.

  • தலையை மூடி தூங்குவது   

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

  • நோய் – மூளைக்கு வேலை

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியான பின், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

  • மூளைக்கு வேலை         

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

  • பேசாமல் இருப்பது 

 அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: