உடற்பயிற்சி ஆசிரியராக நடிக்கின்றார் ‘ஹிப் ஹாப் ஆதி
‘வெந்து தணிந்தது காடு’ படத்தை அடுத்து, ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தைத் தயாரித்து வருகிறது, ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். இதையடுத்து இந்நிறுவனம் தயாரிக்கு படத்தில், இசை அமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி, ஹீரோவாக நடிக்கிறார்.
இதை ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறா இன்னும் பெயரிடப்படாத படம் பற்றி அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக ஹிப் ஹாப் ஆதி நடிக்கிறார்.
பள்ளி, கல்லூரி பின்னணியில் இந்தக் கதை உருவாகிறது. காமெடி படம் என்றாலும் சமூகத்துக்குத் தேவையான மெசேஜும் படத்தில் இருக்கிறது. ஈரோடு பகுதியில் நடக்கும் கதை. மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்” என்றார்.