அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் ஜெயந்தி விழாவை ஒட்டி அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த சில நாட்களாக அன்னதானத்தை தொடங்கி வைக்குமாறு முக்குலத்தோர் அமைப்பினர் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
முத்துராமலிங்கத் தேவர் ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும்.
தேவரின் நினைவிடம் அருகே முக்குலத்தோர் அமைப்பினர் சார்பில் அன்னதான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது .