இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு பணிகளை மக்களின் தேவையை உணர்ந்து திட்டமிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடித்திட வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
திருக்கோவில் வளர்ச்சி பணி திட்டம்இந்த ஆய்வின்போது, இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமிகள் திருக்கோயிலில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பழமை வாய்ந்த மூன்று ஆலயங்கள் புனரமைத்தல் ஆலயத்தின் உட்பகுதியில் பல்வேறு இடங்களில் தரைத்தளம் அமைத்தல் மற்றும் பக்தர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் போதிய மின்விசிறிகள் அமைத்தல், இருக்கைகள் அமைத்தல், கூடுதல் கழிப்பறை கட்டடம் அமைத்தல், குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை உரிய காலத்தில் முடித்திட வேண்டுமென இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அவர்களுக்கு இக்குழு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்கள்,
மேலும் இந்த திருக்கோயிலில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், அங்கு பக்தர்கள் உணவு அருந்தி வருவதை பார்த்து அவர்களுக்கு வழங்கி வந்த உணவுகளை சாப்பிட்டு பார்த்ததுடன் பக்தர்களே மிக நல்ல முறையில் இருப்பதாக தெரிவித்தார்
திருக்கோயில் பார்வையிடும் போது உடனிருந்தவர்கள்
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அண்ணாத்துரை , அருள் கருணாநிதி மனோகரன் , ராமலிங்கம் , வில்வநாதன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்