Sunday, May 28, 2023
Homeஉடல்நலம்சருமத்தை அழகாகும் பெர்ரி பழங்கள்

சருமத்தை அழகாகும் பெர்ரி பழங்கள்

பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பெர்ரி பழங்கள் குறித்தும் அவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.

பெர்ரி பழங்கள் சத்தானவை. சிறிய அளவில் இருக்கும். இது கூழ் போன்று இருக்க கூடும். இது வட்டவடிவில் இருக்கும் நிறங்கள் வணணமயமாக இருக்கும். பிரகாசமாக இருக்கும். இதன் சுவை இனிப்பு, புளிப்பு சுவையை கொண்டிருக்கும்.இது சுவையாகவே இருக்கும். சத்தானதும் கூட. மேலும் இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பெர்ரிகளில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளன. உயர் கார்ப் உணவுகளோடு எடுத்துகொள்ளும் போது அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கப்படும் போது இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்தலாம். பெர்ரிகள் நார்ச்சத்து நிறைந்தவை. முழுமையான உணவை எடுத்துகொண்ட திருப்தியை அளிக்கும். 7 விதமான பெர்ரிகளின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

நார்ச்சத்துகளின் நல்ல மூலம் ராஸ் பெர்ரி என்று சொல்லலாம். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் பாலிபினால்களும் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க செய்யும்.

ராஸ்பெர்ரி

இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிக பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தம் மற்றூம் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இது தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்தவை. இது சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகின்றன.

நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன.நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி கண் சவ்வுகளை சுத்தம் செய்வதன் மூலம் கண் உலர்விலிருந்து பாதுகாக்கிறது.

ஆக்ஸிஜனேற்ற செறிவுகளில் ராஸ்பெர்ரி இருப்பதால் இது புற்றுநோயை எதிர்த்து போராடுகின்றன. இது பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மூலமாக வீக்கத்தை குறைகிறது.

வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. நோய்த்தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சேதமடைந்த சரும திசுக்களை சரி செய்கிறது.

சருமத்தை அழகாகும் பெர்ரி பழங்கள்

​ப்ளூபெர்ரி பழங்கள்

ப்ளூபெர்ரி வைட்டமின் கே -இன் சிறந்த மூலமாகும். இது ஆந்தோசயனின் என்ற தாவர கலவை உள்ளது. இதுதான் ப்ளூ பெர்ரிகளுக்கு நீல நிறத்தை வழங்குகிறது.

ப்ளூபெர்ரி எல்.டி.எல் கொழுப்பை குறைப்பதன் மூலம் மாரடைப்பை அபாயத்தை தடுக்க செய்கிறது.

இது தமனிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தின் அம்சங்களாஇ மேம்படுத்தகூடும். இது நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்யலாம்.

இது இதய ஆரோக்கியம், வலிமையான எலும்பு, தோல் ஆரோக்கியம், இரத்த அழுத்தம், நீரிழிவு மேலான்மை, புற்றுநோய் தடுப்பு மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவும். ஒருகப் ப்ளூபெர்ரி நாள் ஒன்றுக்கு தேவையான வைட்டமின் சி ஒரு நபருக்கு 24% பரிந்துரைக்கின்றன.

இதில் இருக்கும் வைட்டமின் கே உள்ளடக்கம் இரத்த உறைதலை பாதிக்கும் என்பதால் இரத்த மெலிதலை பயன்படுத்துபவர்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

​ஸ்ட்ராபெர்ரி பழங்கள்

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. அவை இரத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் உள்ளிட்ட இதய நோய்களுக்கான பல ஆபத்து காரணிகளை குறைக்கலாம்.

இது உடலில் ஹெச்.டி. எல் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது. இது புற்றுநோய் அபாயத்தையும் குறைக்க செய்கிறது.

வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பாலிபினால்கள் எனப்படும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இவை குறைந்த கலோரி கொண்ட உணவும் கூட.

மாங்கனீசு மற்றும் பொட்டாசியத்தின் நல்ல மூலம் இது. எட்டு ஸ்ட்ராபெர்ரிகள் ஆரஞ்சு நிறத்தை காட்டிலும் அதிகமான வைட்டமின் சி கொண்டவை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments