Friday, March 29, 2024
HomeUncategorizedHealthy Vegetable: தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ற காய் அது என்ன காய்?

Healthy Vegetable: தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ற காய் அது என்ன காய்?

Healthy Vegetable: தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ற காய் அது என்ன காய்?

உணவில் முக்கியமானது காய்கறிகள். பொதுவாக, ஒருவர் வசிக்கும் தட்ப வெட்ப நிலையில் விளையும் காய் கனிகளை பயன்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது சத்தியமான உண்மை.

நமது சுற்றுவட்டாரங்களில் சுலபமாக கிடைக்கும் காய்களிலேயே பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. நாட்டுக் காய்கள் உடலுக்கு நன்மைகளை அள்ளி வழங்குபவை என்பதை மறந்துவிடக்கூடாது.

நமது நாட்டுக் காய்களில் முக்கியமான ஒன்று பீர்க்கங்காய். பீர்க்கங்காயில் நார்ச்சத்து மிகவும் அதிக அளவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏ, பி, சி என பல விட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த சத்தான காய் பீர்க்கங்காய்.

இது நீர்க்காயாக இருப்பதால், அதாவது பீர்க்கையில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் மிகவும் உகந்த காயாக இருக்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்தும் மாவுச்சத்தும் ரத்தத்தால் எளிதாக கிரகித்துக் கொள்ளக்கூடியது.


பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின்களும், தாது உப்புக்களும் தொற்றுக் நோய் கிருமிகளால் உடல் பாதிக்கப்படாமல் பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

பீர்க்கங்காய் சாறு, மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பீர்க்கங்காயின் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி லேசாக சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

சருமப் பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது பீர்க்கை. சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலையின் சாறை எடுத்துத் தடவினால் நிவாரணம் கிடைக்கும். பீர்க்கங்காயை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்வதால் கண்பார்வைத் திறன் மேம்படும்.

பீர்க்கங்காய் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதோடு,  வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுக்கும். இதனால் அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

ALSO, READ World Heart Day 2021 (உலக இருதய தினம் 2021)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments