அமாவாசை தர்ப்பணத்தின் சிறப்புகள்
ஆண்டனா உதவுவதை போல, நாம் சொல்லும் மந்திரங்கள், மிக வேகமாக அந்தந்த தெய்வங்களை சென்றடைய தர்ப்பை உதவுகிறது.
இப்படி சக்தி வாய்ந்த தர்ப்பையை கையில் வைத்துக்கொண்டு பித்ருக்களுக்கு பிண்டம் படைத்தால் அவை பித்ருகளை எளிதாக சென்றடைந்து அதன் பலனாக பல தோஷங்கள் நீங்கும்.
பூஜை முறைகள்
கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து, பித்ருக்களின் படங்கள் இருந்தால், அதில் துளசி மாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.
தோஷத்தையும் சாபத்தையும், அதனால் ஏற்படும் சுப தடைகளை நீக்கி நன்மைகளை அள்ளி தர பித்ருக்கள் காத்திருக்கிறார்கள். அதனால் பித்ருக்களுக்கு மரியாதை தந்து, அவர்களின் பசியை போக்க தை அமாவாசை அன்று பிண்டம் படைத்து பூஜை செய்ய வேண்டும்.
மறவாதீர்கள். நாம் தரும் பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும்.
இறைவனை வழிபடவும், முன்னோர்களுக்கு மரியாதையும், வழிபாடும் செய்வதற்கான அற்புதமான மாதம் தான் ஆடி மாதம்.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம், பிரார்த்தம் செய்ய மிக உகந்த நாள் அமாவாசை. அதிலும் குறிப்பாக மூன்று அமாவாசை தினங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி), தை அமாவாசை ஆகியவை முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க மிகவும் சிறப்பானது.
ஆடி அமாவாசை சிறப்புகள் மற்றும் விரத முறைகள்
ஆடி அமாவாசை :
ஆடி அமாவாசை தினத்தில் தான் நம் பிதுர்கள் பித்ரு லோகத்திலிருந்து கிளம்பி பூலோகம் வருவதாக கருதப்படுகிறது.
மகாளய அமாவாசை
பிதுர்கள் பூலோகம் வந்து அடையக்கூடிய நாள் தான் மகாளயா அமாவாசை என கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?: தர்ப்பணதிற்கு உரிய நாட்கள் இதோ
இப்படி ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை (புரட்டாசி), தை அமாவாசை ஆகிய முக்கிய அமாவாசை தினத்தில் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் நம் பித்ருக்களின் ஆசி பெறலாம்.ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் :
பித்ரு தோஷ பரிகாரம் ஆடி அமாவாசை
பித்ரு தோஷம் கட்டுப்பட நாம் மேற்கொள்ளவேண்டிய பரிகாரம் பற்றியதாகும்.
இறைவன் நமக்கு வருடத்தில் மூன்று சக்திவாய்ந்த அமாவாசைகளை உருவாக்கித்தருகின்றார். ஒன்று தை அமாவாசை, இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்ற ஆடி அமாவாசை, மஹாளய பச்ச அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளிலே பித்ருக்களை நாம் நினைவு கூற வேண்டும்.
ஏனென்றால்,நம் ஜனன ஜாதகத்திலே பித்ரு தொல்லை இருக்கின்றது, பித்ரு சாபம் இருக்கின்றது என்பதை கண்டறிவதற்கான ஜோதிட வாய்ப்பாடுகளை இப்பொழுது காணலாம்.
ஒன்று சூரியன் என்ற கிரகம் நீச்சம் பெற்றிருந்தாலோ அல்லது சூரியன் பகைவர்களின் கால்களிலே இருந்தாலோ அல்லது 9வது இடத்திலே நச்சுகிரகங்கள் இருந்தாலும் சூரியனின் மீது பகைகிரகங்களின் பார்வை விழுந்தாலும் ஒருவரது ஜனன ஜாதகத்திலே இந்த பித்ரு தோஷம் இருக்கின்றது.
இந்த பித்ருதோஷம் விலக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்பாக, கருட புராணம் என்ன சொல்லுகின்றது என்றால், இங்கு நாம் வாழும் பூமி மண்டலத்திலிருந்து ஒன்பதே கால் கோடி மைல்களுக்கு அப்பால் சூரியன் என்ற ஒரு கிரகம் இருக்கின்றது.
அந்தச் சூரிய கிரகத்திலிருந்து ஒன்பதே கால் கோடி மைல்களுக்கு அப்பால் “பித்ரு லோகம்” இருக்கின்றது.
அந்த பித்ரு லோகத்திலே இருக்கின்ற சூட்சும சரீரத்தை தாங்கி இருப்பவர்களுக்கு உணவு என்னவென்றால், நாம் இங்கே அவர்களை மனதில் நினைத்து அவர்களுக்கு அளிக்கும் எள்ளானது அவர்களுக்கு அமிர்தமாக மாறிவிடும்.
அதைபெற்ற சூரியன் பித்ரு தேவதைகளிடம் ஒப்படைத்து அவர்களின் மூலமாக நம் பித்ருக்களின் பசியை போக்குகின்றார்.
நம் உலகத்திற்கும், பித்ருக்களின் உலகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், நம் உலகக் கணக்கின்படி காணும் போது,365 நாட்கள் கொண்டது ஒரு வருடம். நமது ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள் கணக்காகும்.
உதாரணமாக, நமது பாட்டன் இறந்து நிலவுலக கணக்கின் படி 50 வருடங்கள் என்பது அங்கே 50 நாட்களாக மாறும்.
பித்ருகளுக்கு சரிவர திதி, திவசம், தர்ப்பணம் செய்யவில்லையேன்றால், அவர்கள் மனதில் புழுங்கி வடிக்கும் கண்ணீர் நம் சந்ததியையே பாதிக்கும்.
எப்படி நம் பாட்டனுக்கு, தந்தைக்கு அல்லது நம் முன்னோர்களுக்கு திதி செய்யவில்லையேன்றால் நம்மை எப்படி பாதிக்கின்றது என்றால், நம் உடலிலே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள் என்றும், அவர்களின் குறைகள் நிவர்த்தியாகும் வரை இவ்வுலகை விட்டு அவர்கள் அகலமாட்டார்கள் என்றும் கருட புராணம் கூறுகின்றது.
ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்குநோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை).
ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.
ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை.
மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது.
இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.
அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது.
எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப் பிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும்.
இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும், அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள் தரிசித்திருப்பார்கள்.
கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டாக்கள் (வேதவிற்பன்னர் கள்) காட்டுவர்.
ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது.
வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர்.
இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.
மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது.
அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம்.
அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள்
மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும்.
இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.
ஆகவே, அவர்களுக்குரிய திதி, தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாக செய்வது ஒன்றே அவர்களுக்கு நிச்சயமாக விடுதலை அளிக்கும்.
அதனால் இந்த ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து, திதி,திவசம் செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இன்பமாக வாழவேண்டும்.