Friday, March 29, 2024
Homeஆன்மிகம்மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் வரலாறு

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் வரலாறு

  • ஒரு முறை பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி, பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு சாபமிட, சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவபெருமான் அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பார் என்றார்.
  • அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் மேல்மலையனூரில் இருந்த நதியைத் தாண்டி வந்தபோது அகோர உருவில் பாம்பாக இருந்த பார்வதியும் மேலும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றனர் .
  •  அதே நேரத்தில் தான் மேல்மலையனூரில் அதே அதி பயங்கர உருவுடன் இருந்தவாறு அங்கு வந்து அவளை வேண்டித் துதிக்கும் பக்தர்கள் “சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து, பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனிய தீமைகளை ஒழித்து, அவர்கள் நலனைக் காத்தருளிக் கொண்டு இருப்பேன்” எனவும் கூறிவிட்டு மறைந்தார். அதனால் பார்வதி அதே இடத்தில் பூமியில் புற்றில் பாம்பாக உள்ளதாக ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் உள்ளது.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வரலாறு

மேல்மலையனூர்

போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரந்த பரப்யையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர்.

தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும். தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன.

கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே “மலையன்” என்பவராவார்.

இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான பூங்காவனத்தை ஆட்சி புரிந்துள்ளார். தண்டகாருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்கு மேல் மலைப்பகுதியை கொண்டதாகும்.

மேல் மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் “மலையனூர்” என்ற காரண பெயரானது.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி  வரலாறு

மேல்மலையனூரில் மலையன் ஆட்சி புரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தளங்களின் அடிச்சுவடுகள் இருந்தன என்றும், மேல்மலையனூரில் ஒரு தெருவின் பெயர் கோட்டை மேட்டுத் தெரு என்று இருப்பது இதற்கு சான்றாக அமைகிறது.

ஒரு கால கட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மனை பூங்காவனத்தாள் என்று அழைத்து வழிபாடு செய்துள்ளனர். இதற்கு சான்றாக பதிற்றுப்பத்தில் பத்து பாடல்கள் கொண்ட பதிக பாடலில் “பூங்காவில் ஊனுழலுரை ஓங்கார சக்தியே பூங்காவானத் தாயே” என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் அமைகிறது.

மேல்மலையனுரின் வடகிழக்கு பகுதியில் படிகள் மிகவும் பழமை வாய்ந்த அக்னி தீர்த்தம் என்ற திருக்குளம் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே குளக்கரையின் மேல் பெரியாயி சன்னதியும் அமைந்துள்ளது.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வரலாறு

பூஜை விபரம்

காலசந்தி பூஜை – 05:00 AM to 06:00 AM
சாயரட்சை பூஜை – 04:00 PM to 05:00 PM

கோவில் திறக்கும் நேரம்

தினசரி காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, அமாவாசையன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்.

 

இதையும் படியுங்கள் || சாமிக்கு படைக்கும் தேங்காயிக்கு குடுமி அவசியமா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments