Tuesday, March 28, 2023
Homeராமநாதபுரம்தமிழ்நாட்டின் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டின் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டகளுக்கு விடுமுறை

தமிழ் நாட்டின் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்தது வரும் கனமழையால்  இன்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தொடரும் கனமழை

டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது. அதன்பின் இரவில் தீவிரம் எடுத்த மழை, தற்போது அதிகாலையிலும் பெய்து வருகிறது.நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாளும் இதே மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் 14ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் தீவிர கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடரும்கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும்படி தமிழ்நாடு அரசு உத்தரவின் கீழ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை திருவாரூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தந்த மாவட்டத்திற்குரிய மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .இதனை தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  இராமநாதபுரம் மாவட்டத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் சிவகங்கை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments