Tuesday, June 6, 2023
Homeஅறிந்து கொள்வோம்வீட்டு உபயோக குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்

வீட்டு உபயோக குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்

வீட்டு உபயோக குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. துணிகள் துவைக்கும்போது பழுப்பாகி விடுகின்றனர். இதனால் சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 ஸ்பூன் கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

2. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு முன் வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌கு தான் பாலீஷ் போட வேண்டும்.

3. மூட்டைப்பூச்சியை விரட்ட கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். அதேபோல் தலையணை, மெத்தை, கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

4. தோல் பொருட்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌ லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையை பூசி துடைக்க‌ வேண்டும்.

5. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.

6. அதிக‌ வெளிச்ச‌ம் த‌ர‌ மெழுகுவ‌ர்த்தியை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

7. டி.வி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் – கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் – பிக்சர் ட்யூபும், ட்யூப் – லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

8. பச்சை கற்பூரம் கலந்த நீரினால் குளிர்சாதன பெட்டியை துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

9. தாம்பூல சுண்ணாம்பு கொண்டு கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

10. ஏலக்காய்களை சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments