Saturday, December 9, 2023
Homeமருத்துவம்உடல் நலத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்ற ஹார்மோன்சுரப்பிகள் 

உடல் நலத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்ற ஹார்மோன்சுரப்பிகள் 

மகிழ்ச்சியான மன நிலைக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. கவலை, கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும், நோய் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாத்து கொள்வதிலும் ஹார்மோன்களின் செயல்பாடு அடங்கி இருக்கிறது.

ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் சுரப்பிகளின் இயக்கம் சீராக இருப்பதன் மூலமே ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை பயணம் தொடரும். ஹார்மோன்கள் சுரப்பிகளின் செயல்பாட்டில் பாதிப்பு வரும் போது நோய் பாதிப்பு கள் ஏற்படக்கூடும். அதனை தவிர்ப்பதற்கு உணவு பழக்க வழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஹார்மோன் சுரப்பிகளின் அளவை சீர்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

  1. உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆப்பிள் பழம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும்.
  2. குறிப்பாக டீன்-ஏஜ் பெண்களுக்கு தேவைக்கு அதிகமாக சுரக்கும் ஈஸ்ட் ரோஜன் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும்.
  3. ஆதலால் பெண்கள் அன்றாட உணவு பழக்கவழக்கத்தில் ஆப்பிள் பழத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும்.
  4. ஹார்மோன்கள் அளவை சீராக பராமரிப்பதற்கு ஆலிவ் ஆயிலையும் பயன்படுத்தலாம்.
  5. அதிலிருக்கும் கொழுப்பு அமிலம் உடலிலுள்ள கொழுப்பின் அளவை ஒழுங்குபடுத்தி ஹார்மோன்கள் சீராக செயல்பட வழிவகுக்கும்.
  6. பாதாமில் நார்ச்சத்து, புரோட்டின் மற்றும் இதயத்திற்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
  7. தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை நீரிலோ, பாலிலோ ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.
  8. அது கார்போஹைட்ரேட், ஹார்மோன் கள் மற்றும் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும்.
  9. கோதுமை உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் வைட்டமின்-பி பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவை வரைமுறைப்படுத்தி ஆரோக்கியம் காக்கும். கைக்குத்தல் அரிசியையும் சாப்பிட்டு வரலாம்.
  10. மீன் உணவுகளையும் சாப்பிட்டு வர வேண்டும். அதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மாதவிடாய் சமயங்களில் பெண்களின் உடல் நலத்திற்கு வலு சேர்க்கும்.
  11.  ஒட்ஸ் உணவுகளையும் தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். அதில் இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின் ஈ, புரோட்டின், நார்ச்சத்துக்கள் இருக்கின்றன.
  12. அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments