Friday, December 9, 2022
Homeஆன்மிகம்ராசிபலன்கள் (05-10-2022)

ராசிபலன்கள் (05-10-2022)

ராசிபலன்கள் (05-10-2022)

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, புரட்டாசி 18
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ தசமி – Oct 04 02:21 PM – Oct 05 12:00 PM

சுக்ல பக்ஷ ஏகாதசி – Oct 05 12:00 PM – Oct 06 09:40 AM

நட்சத்திரம்

திருவோணம் – Oct 04 10:51 PM – Oct 05 09:15 PM

அவிட்டம் – Oct 05 09:15 PM – Oct 06 07:42 PM

கரணம்

கரசை – Oct 05 01:11 AM – Oct 05 12:00 PM

வனசை – Oct 05 12:00 PM – Oct 05 10:50 PM

பத்திரை – Oct 05 10:50 PM – Oct 06 09:40 AM

யோகம்

சுகர்மம் – Oct 04 11:23 AM – Oct 05 08:21 AM

த்ருதி – Oct 05 08:21 AM – Oct 06 05:18 AM

சூலம் – Oct 06 05:18 AM – Oct 07 02:20 AM

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM
சூரியஸ்தமம் – 6:05 PM

சந்திரௌதயம் – Oct 05 2:48 PM
சந்திராஸ்தமனம் – Oct 06 2:49 AM

அசுபமான காலம்

இராகு – 12:08 PM – 1:37 PM
எமகண்டம் – 7:40 AM – 9:09 AM
குளிகை – 10:38 AM – 12:08 PM

துரமுஹுர்த்தம் – 11:44 AM – 12:32 PM

தியாஜ்யம் – 12:59 AM – 02:29 AM

சுபமான காலம்

அமிர்த காலம் – 11:33 AM – 01:02 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

சத்திரம் வரை – 09:15 PM
மித்திரம்

வார சூலை

சூலம் – வட
பரிகாரம் – பால்

புதன் ஹோரை

காலை

06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11: 00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்.

ராசிபலன் (05-10-2022)

மேஷம் அக்டோபர் 05, 2022  உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொறுமையாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : ஒத்துழைப்பான நாள்.

பரணி : ஆதாயம் அடைவீர்கள்.

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபம் அக்டோபர் 05, 2022

உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் துறை சார்ந்த புதிய அனுபவம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் ஈடேறும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரோகிணி : தேடல் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.

மிதுனம் அக்டோபர் 05, 2022

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான தனவரவில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். போட்டி நிறைந்த நாள்.                       அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.

திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

கடகம் அக்டோபர் 05, 2022

தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. உத்தியோகப் பணிகளில் இருப்பவர்கள் உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

பூசம் : தெளிவு ஏற்படும் .

ஆயில்யம் : அங்கீகாரம் கிடைக்கும்.

சிம்மம் அக்டோபர் 05, 2022

உத்தியோகம் தொடர்பான புதிய வாய்ப்புகள் கைகூடும். சந்தேக உணர்வுகளை குறைத்து கொள்ளவும். சூழ்நிலைகளை அறிந்து முடிவினை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த பணிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : வாய்ப்புகள் கைகூடும்.

பூரம் : இன்னல்கள் குறையும்.

உத்திரம் : தீர்ப்பு கிடைக்கும்.

கன்னி அக்டோபர் 05, 2022

பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளால் தடுமாற்றம் உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த தேடல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பலரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் புதுவிதமான சூழல் அமையும். நட்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : தேடல் உண்டாகும்.

அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.

சித்திரை : புதுவிதமான நாள்.

துலாம் அக்டோபர் 05, 2022

புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சுவாதி : சிந்தித்து செயல்படவும்.

விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம் அக்டோபர் 05, 2022

மனதில் உத்வேகமான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்க வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சிறுதூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

விசாகம் : உத்வேகமான நாள்.

அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

கேட்டை : பயணங்கள் கைகூடும்.

தனுசு அக்டோபர் 05, 2022

புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் லாபம் அடைவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : ஆர்வம் ஏற்படும்.

பூராடம் : மந்தத்தன்மை குறையும்.

உத்திராடம் : லாபகரமான நாள்.

மகரம் அக்டோபர் 05, 2022

பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில ஒப்பந்தங்கள் கைகூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். திருப்திகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

திருவோணம் : நம்பிக்கை ஏற்படும்.

அவிட்டம் : மறதி நீங்கும்.

கும்பம் அக்டோபர் 05, 2022

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். கடன் நிமிர்த்தமான செயல்பாடுகளில் அலைச்சலும், அனுபவமும் மேம்படும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் தேவை. வியாபார பணிகளில் இருப்பவர்கள் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

சதயம் : அனுபவம் மேம்படும்.

பூரட்டாதி : சோர்வு உண்டாகும்.

மீனம் அக்டோபர் 05, 2022

மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: