Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்வீட்டு வசதி குடியிருப்பில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி: ஆட்சியரிடம் புகார் அளித்தனர்

வீட்டு வசதி குடியிருப்பில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி: ஆட்சியரிடம் புகார் அளித்தனர்

வீட்டு வசதி குடியிருப்பில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி: ஆட்சியரிடம் புகார் அளித்தனர்

ராமநாதபுரம்.             ராமநாதபுரத்தில் தமிழ் நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படைவசதிகள் இன்றி தவிப்பதாக குடியிருப்போர் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

மனு விவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 600 குடியிருப்புகள் கட்டுவதற்கு 2002 ஆம் ஆண்டு இடம் விற்பனை செய்யப்பட்டது. இந்த இடத்தை வாங்கிய அரசு ஊழியர்கள் மற்றும் முக்கிய நபர்கள் அந்த இடத்தில் குடியிருப்புகள் கட்டியுள்ளனர்.

ஆனால் 20 ஆண்டுகள் ஆன நிலையில் குடியிருப்பு பகுதிக்கான குடிநீர், சாலை, கழி நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகிறோம்.

மேலும் பல முறை பல மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் மீது புகார்: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா எஸ்.தரைக் குளம் கிராமத்தைச் சேர்ந்த 48 பேர் அளித்த மனு விவரம்: தனியார் நிறுவனத்திடம் வைப் புத்தொகை மற்றும் மாதத்தவணையில் ஒவ் வொருவரும் குறைந்தது 50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பணம் செலுத்தினோம். மொத்தம் 40 லட்சம் வரை பணம் செலுத்தப் பட்டுள்ளது. முதிர்வு காலம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்தும் பணத்தைக் கொடுக்கவில்லை. எனவே தனியார் நிறுவனத்திடமிருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments