ஸ்பாட் பைன் ரத்து செய்வது எப்படி
சலான் என்பது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். இது வரையறுக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் மோட்டார் வாகன ஓட்டுனருக்கு வழங்கப்படும் ஒரு அபராத ரசீது ஆகும்.
- ஸ்பாட் சலான்
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஸ்பாட் பைன் போடப்படும்.
- இ-சலான்
விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மின்னணு முறையில் சலான் வழங்கப்படும். உதாரணத்திற்கு, தவறான பார்க்கிங், டிஜிட்டல் கேமராவால் கண்டுபிடிக்கப்பட்ட அதிவேக வாகனங்கள், சிக்னலை சரிவர கவனிக்காமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது.
- மத்திய அரசு
போக்குவரத்து இ-சலானை ஆன்லைனில் செலுத்த ஒவ்வொரு மாநிலங்களும் அதெற்கென ஒவ்வொரு வலைத்தளங்களை உருவாகியுள்ளன. மத்திய அரசு தனது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் போக்குவரத்து சவால்களின் ஆன்லைன் கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இ- சலான் ரத்து
இ-ஆளுமையின் கீழ், நீங்கள் போக்குவரத்து இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம். அதேசமயம் தவறாக விதிக்கப்படும் இ – சலானை ரத்தும் செய்யலாம்.
- https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.
- நீதிமன்றம்
குற்றம் நடந்த நாளிலிருந்து இ-சலானை செலுத்த அதிகபட்சம் 60 நாட்கள் வழங்கப்படுகிறது. அப்படி செலுத்தாத பட்சத்தில் அது நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். கட்டணம் மற்றும் வழக்கிற்கான தீர்வு நீதிமன்றத்தில் நடைமுறை படுத்தப்படும். நீதிமன்றத்தில் நீங்கள் வழக்கை எதிர்கொள்ளலாம்.