Thursday, March 28, 2024
Homeஉடல்நலம் அறிவோம்கண்களின் வரும் மாற்றத்தை வைத்து உடல் நிலையை கண்டுபிடிப்பது எப்படி

கண்களின் வரும் மாற்றத்தை வைத்து உடல் நிலையை கண்டுபிடிப்பது எப்படி

மங்கலான பார்வை

கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் தொடர்ந்து பணி செய்பவர்களுக்கு இப்பிரச்சனை உருவாகிறது. கணிணியின் டெஸ்க்டாப் அமைப்பு சரி இல்லாவிட்டாலும், கண் மங்கலாக வாய்ப்பு உள்ளது. கண்களில் கண்ணீர் எரிச்சல் ஏற்படும். கண்களில் தொடர்ந்து மங்கலான நிலைமை ஏற்பட்டால் நீரழிவு நோய்க்கு வாய்ப்பு உள்ளது. கண்களில் உள்ள லூப்ரிகேட்டிங் ஏஜென்ட் இல்லாத காரணத்தினாலும் கண் மங்கலாகும்.

சிவப்பு மற்றும் எரிச்சல் கண்கள்

கண்கள் சிவப்பாக தெரிவதும் கண்களில் எரிச்சலும் இருந்தால் சைனஸ் மற்றும் சளிக்கான அறிகுறியாகும். அலர்ஜி மற்றும் மேக்கப் செட் போடுவதால் கண் எரிச்சல் வர வாய்ப்புள்ளது.

வெளிர் நிற கண்கள்

உடலிலுள்ள பித்தப்பை, பித்த நாளங்கள், கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால் கண்கள் வெளிர் நிறமாக தெரியும். கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக காணப்பட்டால் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும்.

வீக்கமான கண்கள்

உடலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கண் நீங்க வாய்ப்பு உள்ளது. உடலில் தைராய்டு குறைபாடு இருந்தால் கூட கண்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. எவ்வித காரணமுமின்றி கண்கள் வீங்கி இருந்தால் நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

வறட்சியான கண்கள்

கண்களில் வறட்சி ஏற்பட்டால் உடலில் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளது என அர்த்தம். கண்களில் உள்ள வறட்சியைப் போக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல சத்தான உணவுகளை தினம்தோறும் சாப்பிட வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments